கவிதை 360 கடல் வழிக்கால்வாய் ஆன்மீக கவிதை
--------------------------------
கடல் வழிக்கால்வாய்--------------------------------
.........இயற்கையோடு ஓட்டபந்தையம் .......
^^^^^^^^^^^^^^^^^
எனக்கும் இயற்கைக்கும் ....
ஓட்டப்பந்தையம் ......
எல்லை கோட்டை தொடுவதில் ....
கடும் போட்டி ......!!!
போட்டியின் தொடக்கமே ....
இயற்கை முன்னணி பெற்றது ....
சற்று என்னை திரும்பி பார்த்து ....
உன்னை படைத்த என்னோடு ....
உனக்கு போட்டியா ...?
தோல்வியை ஒப்புக்கொள் ...
நான் விலகி விடுகிறேன் .....!!!
நான் விடவில்லை ....
என் முழு முயற்சியையும் .....
பயன்படுத்தி இயற்கையை ....
சற்று முந்திக்கொண்டேன் .....
நானும் சளைத்தவனில்லை ....
திரும்பி பார்த்து சொன்னேன் ....
படைத்தது நீயாக இருக்கலாம் ....
உனக்கு படைக்கத்தான்தெரியும் ....
முயற்சிக்க தெரியாது .....!!!
இன்னும் நீ ஒன்பது கோள்...!
உன்னால் பெரிதாகவும் முடியல்ல ....
சிறிதாகவும் முடியல்ல .வேகத்தை ...
கூட நீ இன்னும் மாற்றல்ல என்றேன்...
இயற்கை மௌனமானது ....!!!
திடீரென எங்களின் பின்னான் ....
பலத்த காற்று வீச இயற்கை ....
வேகமாக முன்னேறியது -நான்...?
பஞ்சல்ல -மனிதன் -காற்றோடு ...
போக முடியாது ......!!!
இயற்கை என்னை ஏளனமாக ....
பார்த்தது - புரிகிறதா என்பலம் ...?
அதேநேரத்தில் மீண்டும் ஒரு ....
பலத்த காற்று இப்போ எங்களுக்கு ....
முன்னாள் வீசியது -இயற்கை ...
எனக்கு பின்னால் சென்றுவிட்டது .....!!!
ஏய் இயற்கையே ...
உனக்கு ஆக்கவும் அழிக்கவும் ...
முடியும் - சொந்த முயற்சியால் .....
மீள முடியாது . மனிதனால் தான் ....
மீள உருவாக்கும் திறன் இருக்கிறது ....!!!
எல்லை கோட்டில் .....
இயற்கை சொன்னது ....
மனிதா நீ கூறிய
அனைத்தையும் -நான்
ஏற்கிறேன் -ஆனால்
இருவருக்கும் தோற்றங்கள் ....
வேறுபடலாம் ஆனால் இருவரும் ...
இயற்கையே .......!!!
நீயும் நானும் பயணிக்கும்
கால்வாய்கள் வேறுபடுகின்றன ....
சங்கமம் கடல் ஒன்றே தான் ....!!!
&
கடல் வழிக்கால்வாய்
ஆன்மீக கவிதை
கவிப்புயல் இனியவன்
கருத்துகள்
கருத்துரையிடுக