இடுகைகள்

நவம்பர் 28, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிதை 360 பெண்ணியம்

  மிதவாதப் பெண்ணியம் --------- இந்த உலகம் ஒரு ... சக்தியால் இயங்குவதுபோல் .... ஒவ்வொருவனின் இயக்ககும் ... ஒரு பெண்ணினால் தான் .... இயங்குகிறது .....!!! பெண்மைக்கு யாரும் .... உரிமை கொடுக்கத்தேவையில்லை.... யார் பறித்தார்கள் கொடுப்பதற்கு ... அவர்களுக்கு எல்லா உரிமையும் ... இருக்கிறது என்பதை ஏற்றால் .... பெண்ணியம் வாழ்ந்துகொண்டே .... இருக்கும் .....!!! ^^^ மிதவாதப் பெண்ணியம் கவி நாட்டியரசர் ....  போராட்ட பெண்ணியம் ___ அடங்கியிருந்தது போதும் பெண்ணே .... குட்ட குட்ட குனிவது குற்றம் ... எத்தனை நாள் தான் .... குனிவாய்....? உனக்கு இல்லாத உரிமையை .... கேட்கவில்லையே .... உன் உரிமையை பறிக்கும் .... மேலாதிக்கத்திடம் தானே .... போராடுகிறாய் ....!!! போராடு போராடு ... உரிமை கிடைக்கும்வரை ... போராடு ....!!! ^^^ போராட்ட பெண்ணியம் கவி நாட்டியரசர்

கவிதை 360 SMS கவிதை

  SMS கவிதை வரி -  செப்டம்பர் 11, 2016 ஆழமாக காதலித்துப்பார் காதல் வலி புரியும் ^^^ காதல் சந்தோசத்திலும் காதல் வலி உண்டு ^^^ சொர்க்கத்தை பார்க்க ஆசைப்பட்டால் காதல் செய் ^^^ காதல் செய்தபின் இதயதுடிப்பு கூட பாரமாய் தெரியும் ^^^ உன்னை போடா என்பதும் என்னை போடி என்பதும் காதலில் அழகு ^^^ & கவிப்புயல் இனியவன் ஒருவரியில் கவிதை வரி SMS கவிதை வரி

கவிதை 360 வாழ்க்கை

  மனிதா.....................................!!! "வெற்றி"  பெற வேன்டும் என்றால் .... அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்திருங்கள் ....!!! "சாதனை"  செய்ய வேண்டுமென்றால் ,,,,, அதிகாலை நான்கு மணிக்கு எழுந்திருங்கள் ....!!! "உலகம் உன்னை திரும்பி பார்க்க " அதிகாலை மூன்று மணிக்கு எழுந்திருங்கள் ....!!! இவை கடினம் தான் ,,,,, ஆனால் நான் அவதானித்த சாதனையாளர் .... வெற்றியாளர்கள் வாழ்கை வரலாற்றில் .... இதையே நான் அவதானித்தேன் ,,,,,!!! நீங்களும் அவதானித்து பாருங்கள் ..... அனுபவித்தும் பாருங்கள் ....!!

கவிதை 360 குடும்பம்

  ஒரு சொல் கவிதை -குடும்பம் மூலக்கடவுள்  மூலமந்திரம்  தந்தை  @ நேரில் கடவுள்  அருள்தரும் கடவுள்  தாய்  @ சுருங்கிய தோல்  அனுபவமுதிர்ச்சி  தாத்தா  @ வாழ்கை பொக்கிஷம்  பொக்க வாய்  பாட்டி  @ குடும்ப சுமை  தலைமைத்துவம்  அண்ணன்  @ குறும்புத்தனம்  கூறிய அறிவு  தம்பி  @ என் கட்சி  என் பக்கம்  தங்கை 

கவிதை 360 மனைவி

  ஒரு வேளை எனக்கு முன்... என் மனைவி இறந்தால்... அவளுக்காக உலகிலையே ... கோயில் ஒன்றைக்கட்டுவேன் .... .இதுவே மனைவிக்கு கட்டிய .... மனைவி மஹாலாகஇருக்கும்... அந்த கோயிலை நான் தான்... நான் தான் அதன் அமைப்பை வடிவமைப்பேன்...! நான் தான் கல் உடைப்பேன் ... நான் தான் மண் சுமப்பேன் ... நான்தான் கட்டி முடிப்பேன்... நானே அழகு பார்ப்பேன்... அந்த கோவிலில் என்குடும்ப... உறுப்பினரை யாரையும் ... வணங்க விடமாட்டேன் ....!!! அவர்கள் கோவிலாக பார்ப்பார்கள் ... நான் கடவுளாக பார்க்கிறேன் ... !!!! என் மீதிக்காலத்தை அங்கேயே .. உண்ணா நோன்பிருந்து ...... இறந்து விடுவேன் ... !!! ^ மனைவிக்கு ஒரு கவிதை

கவிதை 360 தந்தை

  மார்பையே .... என்னை சுமக்கும் சுமை ... தாங்கியே சுமர்ந்து வளர்த்தவரே ... என் அருமை தந்தையே ....!!! யாருக்கும் அடிபணியாதே .... யாருக்கும் தலை குனியாதே ... யாருடைய சொத்துக்கும் ஆசைப்படாதே .... யாருக்காவவும் உன்னை இழக்காதே ... அத்தனையும் பொன்மொழிகள் ... வாசித்து பெறவில்லை ... என் தந்தையின் வாழ்க்கையில் ... பெற்றேன் ....!!! உலகில் அனைவருக்கும் ... சிறந்த முன்மாதிரியாளன் ... தந்தை பண்போடு இருக்கும் தந்தை ... என் தந்தை எனக்கு கிடைத்த ... எல்லை அற்ற பொக்கிஷம் ....!!! + கவிப்புயல் இனியவன் குடும்ப கவிதைகள் (அப்பா  கவிதை

கவிதை 360 இதயம்

இதயம் வலித்தால்  கண்ணீர்.......!!! இதயம் சிலுத்தால் .... சிரிப்பு..........!!! இதயம் சிந்தித்தால் .... கவிதை........!!! இதயம் சிறுக்கினால்  ஓவியம் .......!!! இதயம்  முணுமுணுத்தால் வார்த்தை......!!! இதயம் காண்பது..... கனவு......!!! இதயம் தூங்குவது..... மௌனம்......!!! இதயம் அழுவது ..... பிரிவு.......!!! இதயம் இறப்பது.... தோல்வி.....!!! இதயமே நீயாக இருப்பது.... காதல்.......!!! ^ இதயத்துக்கு ஒரு கவிதை  கவிப்புயல் இனியவன்

கவிதை 360 அம்மா

  அம்மா கவிதை பிஞ்சு விரலை பஞ்சு...... போல் நினைத்து மெல்ல ..... மெல்ல அமர்த்தி சுகம் ..... காணும் உயிரே .........!!! மார்பிலே ...... போட்டுக் கொண்டே... மனம் நிறைந்து மகிழ்ந்து மனத்தால் வளர்த்த உயிரே ....!!! மளமளவென வளர்ந்தேன் .. மணமுடித்து வைத்தாள்... நான் விரும்பிய உயிரை..!! அன்னை அவள் கண் மூடியதால்... அனாதையானேன் அன்பென்னும் உறவிலிருந்து ...!!! உள்ளத்தால்  சொல்லுகிறேன்... தாயை நினைத்து கவிதை எழுதும் எந்த கவிஞனும் ...... கண்ணீரை சிந்தாமல் ....... எழுதவே முடியாது ........!!! & குடுப்ப கவிதைகள் அம்மா கவிதை கவிப்புயல் இனியவன்

கவிதை 360 நகைச்சுவை

  நகைச்சுவை --------------- ஆறடி பனை போல் வளர்ந்திருக்கும் பெண்ணே யாரடி சொன்னது ஓரடி குட்டை பாவாடை போடச்சொல்லி .....? குதிக்கால் செருப்பணிந்து குதிரைபோல்போனவளே குதி இருக்குது உன் கால் எங்கே ...? கை பைக்குள் காசை தவிர கண்டதையும்வைதிருந்தவளே கை இருக்குது உன்கைப்பை எங்கே ...? கண்டதையும் ........ பூசி அழகு காட்டியவளே.... பூசுவதற்கு வர்ணங்கள் இருக்கு ... முகம் இருக்குது உன் அழகு எங்கே ..? ^^^ கவிப்புயல் இனியவன் கானா நகைச்சுவை கவிதை

கவிதை 360 கலவை கவிதை

  இனியவனின் கலவை கவிதைகள் இனியவனின் கலவை கவிதைகள் ---------------------------------------------- 1) ஒரு ஹைக்கூ ------------------------- ஐம்பதில் முதுகு கூனவேண்டும் இருபதில் முதுகு கூனுகிறது மூடைசுமக்கும் தொழிலாளி ------------------- 2) ஒரு சென்றியூ (நகைச்சுவை ஹைக்கூ) ------------------------- அம்மா வயிற்றில் போட்டார் ஆசிரியர் புத்தகத்தில் போட்டார் முட்டை ------------------ 3) ஒரு ஹைபுன் ------------------------ காத்திருப்பேன் அவள் வருவாள் .. பக்கத்தில் அவள் அண்ணன் ... சைக்கிளில் வருவார் .. அருகிலே செல்வேன் .. கண்ணால் கதைப்பேன் .. அவள் யாடையால் கதைப்பாள் .. அண்ணன் கிட்டவரும் போது.. என் நடை வேகமாகும் ... பாடசாலைதான் எனக்கு காதல் சாலை .. கொப்பியை பரிமாறும் போது .. கடிதமும் பரிமாறும் ... விழுந்தது கடிதம் நிலத்தில் .. கண்டார் ஆசிரியர் தந்தார் .. முதுகில் நல்ல பூசை .. நண்பர்கள் கிண்டல் நண்பிகள் அவளை கிண்டல் .. காலம் காதலாகியது .. கல்வி கரைக்கு வந்தது .. காதலும் கரைக்கு வந்தது ... ^ பள்ளி காதல் தொடரும் பள்ளிவரை இல்லை பள்ளி படலைவரை ----------------------------- 4) ஒரு பழமொன்ரியு -------------

கவிதை 360 பொருளாதாரம்

  -------------- பொருளாதாரக்கவிதை --------------- ஏழையின் வீட்டில் ... பசி வயிற்றில் பிறக்கிறது ... செல்வந்தன் வீட்டில் ... பசி கண்ணில் பிறக்கிறது ...! ஏழையின் வீட்டில் ... வயிறு அடுப்பாக எரியும் ... செல்வந்தன் வீட்டில் ... அலங்காரமாய் அடுப்பு எரியும்....! ஏழையின் வீட்டில் ... பசி நோய்க்கு காரணி .. செல்வந்தன் வீட்டில் ... நோய்நீக்கும் காரணி பசி ...! ^^^ கவிப்புயல் இனியவன் வறுமையின் கொடுமை

கவிதை 360 நான் எழுதுவது கவிதை இல்லை

படம்
நான் எழுதுவது கவிதை இல்லை கண்டதையும் கேட்டதையும்.... கண்டபடி கிறுக்குகிறேன்....... யார் சொன்னது நான்............... எழுதுவது கவிதை என்று ....? பயணம் பல செல்கிறேன்..... பயணத்தில் பல பார்க்கிறேன்..... பட்டதை  பார்த்த அனுபவத்தை....... வாழ்க்கை கவிதை  தலைப்பில்..... கண்டபடி கிறுக்குகிறேன்...... யார் சொன்னது நான்........ எழுதுவது கவிதை என்று ....? மரம் வெட்டும் போது...... மனதில் இரத்தம் வடியும்....... எழும் என் உணர்வை...... சமுதாய கவிதை  தலைப்பில்...... கண்டபடி கிறுக்குகிறேன்....... யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....? அடிமாடாக அடித்து..... அடுத்த வேளை உணவுக்கு...... அல்லல் படும் குடும்பங்களை....... பார்ப்பேன் மனம் வருந்தும்.... பொருளாதார கவிதை தலைப்பில்..... கண்டபடி கிறுக்குகிறேன்.... யார் சொன்னது நான்........ எழுதுவது கவிதை என்று ....? காதோரம் கைபேசியை வைத்து..... கண்ணாலும் சைகையாலும்...... தன்னை மறந்து கதைக்கும்..... காதலரை பார்க்கிறேன்....... காதல் கவிதை  தலைப்பில்.... கண்டபடி கிறுக்குகிறேன்..... யார் சொன்னது நான்....... எழுதுவது கவிதை என்று ....? சின்ன வயதில் எல்லோருக்கும்.....

கவிதை 360 திருக்குறள் நட்பு கவிதை

  உயிருக்கு உயிராய் பழகினாலும் ... அறிவற்றவனின் நட்பு ..... உயிருக்கு உயிராய் பழகினாலும் ... உயிரைதருவேன் என கூறினாலும் .... தீய நட்பு தீயதே -தொடராதீர் ....!!! அறிவற்றவனின்  நட்பை காட்டிலும் ..... அறிவுள்ளவனின் பகை ..... பலமடங்கு உத்தமம் .......!!! + குறள் 816 + தீ நட்பு, + பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்  ஏதின்மை கோடி உறும். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல்

கவிதை 360 தன்னம்பிக்கை கவிதை

  தன்னம்பிக்கை கவிதை --------------- தனக்கிருக்கும்..... உறுதியான சக்தி ...... தன்னம்பிக்கை..............! தன்மானம் காத்திட ..... தலைசாயாத சக்தி .... தன்னம்பிக்கை.............! எல்லாமே இழந்தாலும் .... எஞ்சியிருக்கும் சக்தி .... தன்னம்பிக்கை...............! உயிரே போனாலும் ............. உயிர்த்தெழும் சக்தி ........... தன்னம்பிக்கை...........! இரக்க பார்வையை ...... இல்லாதொழிக்கும் சக்தி ..... தன்னம்பிக்கை............! எல்லாம் சாத்தியமே என்று ...... அறிவை நம்பும் சக்தி ........ தன்னம்பிக்கை.............! ^^^ கவிப்புயல் இனியவன் தன்னம்பிக்கை கவி தை

கவிதை 360 தகவளுடன் கவிதை

  தகவளுடன் காதல்கவிதை --------------- கண்ணே ... ஜேர்மனியின் பெர்லின் சுவர் ... இடிக்கப்படு பலவருடமாகிறது ... இரு வேறுபட்ட பொருளாதார ... முறைமைகள் கூட ஒன்றாயின ...! கண்ணே நீ ... எனக்கு விதிக்கும் காதல் .. சுவர் ஏனடி நீண்டுகொண்டே ... செல்லுகிறது .... காதலுக்கு கண்டிப்பு தேவை.... துண்டிப்பாக இருக்கக்கூடாத்தடி ...! ^^^ கவிப்புயல் இனியவன் தகவளுடன் காதல்கவிதை 

கவிதை 360 ஒருதலைக்காதல் கவிதை

  --------------- ஒருதலைக்காதல் கவிதை --------------- உன்னை நினைத்துக் கொண்டிருக்க ....... இனிப்பாய் இருக்கிறது...... நீயும் என்னை........... நினைத்துக்கொண்டிருப்பாய் என நினைத்துக்கொள்வது..... ஒருதலைக்காதல் .......! கோலங்களை...... மனசுக்குள் போடுகிறேன்...... பூவை தலையில் சூட ... ஏங்கிக்கொண்டு .... இருக்கிறேன் .......... காதலிலே கொடூரமானது ... ஒருதலை காதல் தான் ...! ^^^ கவிப்புயல் இனியவன் ஒருதலைக்காதல் கவிதை

கவிதை 360 இயற்கை கவிதை

படம்
ம னிதன் காட்டுக்குள்....  நுழையும் போது...! குரங்குகள் தாவும் ...! நரிகள் ஊளையிடும் ...! குருவிகள் ஓலமிடும் ..! இத்தனையும் அவை  சந்தோசத்தால் .. பயத்தால் செய்யவில்லை....  மரங்களுக்கு அவை .... கொடுக்கும் -சமிஞ்சை... மனிதர்கள் வருகிறார்கள்... மரங்களே விழிப்பாக ..... இருங்கள்  எச்சரிக்கின்றன ....!!! & இயற்கை வள கவிதை  கவிப்புயல் இனியவன்  கவிப்புயல் இனியவன்     மனிதா ..? நீ ஒரு வீடு கட்டுவதற்காக ...... எங்களின்பல நூறு ....... இருப்பிடங்களை அழிக்கிறாய் நாங்கள் .... பறந்த்திடுவோம் என்ற .... நம்பிக்கைதான்... சண்டையிடுவதற்கு ..... சக்தியில்லாதவர்கள் .....!!! இனத்தை ..... அழிப்பவனை இனவாதி  என்றால் ...... நீ பிற இனத்தையல்லவா ... அழிக்கிறாய் ... உன்னை அப்படி அழைப்பது .. தெரியவில்லை ...? & இயற்கை வள கவிதை  கவிப்புயல் இனியவன்