கவிதை 360 பழமொன்ரியு

ஐம்பதில் வளையாது 

ஐம்பதிலும் வளைந்திருகிறது 
முதுகு 

@
கவிப்புயல் இனியவன் 
பழமொன்ரியு  01

....

  பொய் சொன்னால் பொரிகிடைக்காது
பொய் சொல்லியே மாளிகை கட்டினார் 
அரசியல் வாதி 

@
கவிப்புயல் இனியவன் 
பழமொன்ரியு 02

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு 

நஞ்சாக இருந்தும் அளவு மீறுகிறான் 
குடிகாரன் 

@
கவிப்புயல் இனியவன் 
பழமொன்ரியு 04
 

ஆழம் அறியாமல் காலை விடாதே 
அண்டம் அழிந்தாலும் ஆழம் தெரியாது 
காதல் 

@
கவிப்புயல் இனியவன் 
பழமொன்ரியு 05 

பாத்திரம் அறிந்து பிச்சை போடு 
பிச்சைகாரன் கையில் செல்லிடப்பேசி 
தருமம் தோற்றது 

@
கவிப்புயல் இனியவன் 

 

கருத்துகள்

கவிப்புயல் இனியவன்

கவிதை 360 சமூக விழிப்புணர்வு கவிதை

கவிதை 360 கிறிஸ்மஸ் வாழ்த்துக்கவிதை

கவிதை 360 கலவை கவிதை