இடுகைகள்

டிசம்பர் 4, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிதை 360 "இ" கவிதை

  இ னிய  இ னிமையான  இ ன்பமான  இ ல்லத்தில்  இ றையருள்மிக்க  இ ல்லறவாழ்க்கை  இ ன்றும் என்றும்  இ றையருளால்  இ டையூறுகள் நீங்கி  இ ன்பமே  இ டைவிடாமல் கிடைக்க  இ ந்தநாள் மட்டுமல்ல  இ தயத்துடிப்பு உள்ளவரை  இ ன்பலோகத்தில் வாழ  இ ந்த  இ னியவனில்  இ தயம் கனிந்த  இ னிய வணக்கம்  இ யன்றவரை அயலவரையும் இ ன்பமாய் வைத்திருங்கள்  இ றைவன் விரும்புவதும்  இ வ்வுலகில் எல்லோரும்  இ ன்பமாய் வாழவைக்கும்  இயல்புடைய மனிதனை தான் ....

கவிதை 360 மூன்றாம் அறிவு

  மூன்றாம் அறிவு -------------------------- "அ" எழுதியவுடன்...... ஆரம்பமாகிவிடும்..... ஏட்டறிவு........! ஏட்டறிவில்..... ஏற்றம் கண்டவரும்........ உள்ளனர்...... ஏட்டறிவு எட்டாதவரும்..... உள்ளனர்.........! ஒவ்வொரு வயதுக்கும்..... ஒவ்வொரு பட்டறிவு....... ஏட்டறிவில்லாமல்....... பட்டறிவால் வாழ்வியலில்..... பட்டதாரியானவர்களும்..... ஏராளம்.........! ஏட்டறிவும் பட்டறிவும்..... போராட்டத்தாலேயே....... பெறப்படுகிறது.......! ஏட்டறிவும் பட்டறிவும்..... ஏதோ ஒருவகையில்..... யாரோ ஒருவரின் சாயல்.... அல்லது நிழலாகவே..... இருக்கிறது...........! சாயல்களும் நிழல்களும்..... காலத்தால் மறைந்துவிடும்... இல்லையேல் அவரவர்...... காலத்துக்கே பொருந்தும்......! இன்றைய உலகுக்குதேவை...... மூன்றாம் அறிவே....... யாருடைய சாயலோ நிழலோ..... இல்லாமல் உனக்கே உரிய...... அறிவே மூன்றாம் அறிவு.......! மூன்றாம் அறிவை...... தன்னுள்ளே அறிந்தவனே..... இன்றைய சாதனையாளன்...... இது ஆளுக்காள் வேறுபடும்..... நிழலாகவும் சாயலாகவும்..... இன்னொருவருக்கு தொடராது..... தொடரவும் முடியாது.....! @ கவிப்புயல் இனியவன்

கவிதை 360 கொரோனா விழிப்புணர்வு

  கொரோனா விழிப்புணர்வுக் கவிதை ......... தடுப்பூசி வரும் வரை.....  தனிமைப்படுத்தலே மருந்து..... ! கட்டிப்பிடிக்காதே.....  கால் கை கழுவி உள்ளே வா...... ! குடும்பத்தோடும் தனித்திரு....  கூட்டம் கூடி பேசாதே... ! கிடைப்பதெல்லாம் உண்ணாதே....  கீரை வகைகளை உண்...! இதை விட கொடியநோய்க்கு...  கொரோனா ஒரு பயிற்சியாகும்...... !!! +++ கவிப்புயல் இனியவன்  மணிபல்லவம்  யாழ்ப்பாணம்  " கவிதைகள் தொடரும் " உடலுக்கு உழைப்பில்லை....! உளத்துக்கு அமைதியில்லை..! உறவுகளுக்குள் இனிமையில்லை.! உண்பதுக்கும் உறங்குவதற்கும்.. திண்டாட்டம்... ! தனிமைப்படுத்தலால் தவிக்கிறேன்..... !!! thumb_up Like thumb_down Dislike   Home 

கவிதை 360 முதுமைவலி

முதுமை..... இளமையின் நினைவை..... எரிந்த சாம்பலாய்..... சுமர்ந்து கொண்டிருக்கும்.... சுமைதாங்கி..........! மரணத்தின் வாசலை....... ஏக்கத்தோடும் பயத்தோடும்....... வரவேற்றுக்கொண்டிருக்கும்...... மர்ம அறை............! அனுபவங்களை....... முற்களாகவும்...... பூக்களாகவும்...... ரசித்துக்கொண்டிருக்கும்..... ரோஜாச்செடி.....! வார்த்தைகளின்..... வீரியமும்....... இன்பங்களின்....... வீரியமும்...... அடங்கியிருக்கும்....... பெட்டிப்பாம்பு..........! எழும்பு கூட்டை..... தோலால் மறைத்து வைத்து...... கிறுக்கள் சித்திரத்துக்கு...... உயிர் கொடுக்கும்..... உன்னதமான உயிர்.........! நூறு மீற்றர் ஓட்டத்தை...... நொடிக்குள் ஓடியவனும்..... மெதுவாக நடக்க .... கற்றுக்கொடுக்கும் ஆசான்......! கொரட்டைத்தான் ....... மூச்சு பயிற்சி........ இருமல் தான் செய்தி..... தொடர்பாளன்........! அனுபவத்தை  மூலதனமாய்...... கொண்டு ஞானியாகும் நிலை..... அனுபவத்தை தவறாக கொண்டு...... பித்தனாகும் நிலை....... முதுமை.....................! @ கவிப்புயல் இனியவன்