கவிதை 360 தேர்தல் கவிதை

 தேர்தல்


-----------
மெய்யும் பொய்யும் ....
தேர்தலில் போட்டியிட்டன ....
மெய்யின் ஆதரவாளர்கள் ....
மிகக்குறைவு -பொய்யின் ...
ஆதரவாளர்களோ .....
குவிந்து செறிந்து பரந்து ...
காணப்பட்டன .....!!!

பொய்யின் தேர்தல் ...
பிரச்சாரத்தில் பேச்சுகள் ....
தூள் பறந்தது கைதட்டல் ....
வானை பிழந்து சென்றன ....
ஆதரவாளர்கள் உங்கள் ஆட்சியே ...
எங்களுக்கு வேண்டும் .....
நீங்கள் இல்லாத ஆட்சி .....
எங்களுக்கு வேண்டவே வேண்டாம் ....
என்று கோஷமிட்டனர்.....!
மெய்யின் பிரச்சாரத்தில்....
ஆங்காங்கே ஒருசிலர் ......!!!

தேர்தல் முடிவு வெளியானது .....
பொய் கட்சி அமோக வெற்றி ...
மெய் கட்சியினர் கட்டு பணத்தை ...
இழந்தனர் .எதிர் கட்சியே இல்லாமல் ....
பொய் கட்சியினர் அரசை அமைத்தனர் ....
மெய் கட்சி தலைவர் சிறையில் ....
அடைக்கப்பட்டார் ......!!!

பொய்களே அரச கொள்கையானது ....
லஞ்சமே தேசிய தொழிலானது ....
உண்மை பேசியோர் சிறையில் ....
அடைக்கப்பட்டனர் - லஞ்சம் ...
கொடுக்க மறுத்தோர் நாக்கு ....
அறுக்கப்பட்டது - மெய் பேசியோர் ...
பொய்பேசியோர் வீடுகளில் ....
உயிர் பிச்சை கேட்டு கெஞ்சினர் ......!!!

பொய் பேசாத தனியார் நிறுவனங்கள் ....
லஞ்சம் கொடுக்காத நிறுவனங்கள் ....
அரசை புகழ்ந்து பேசாத நிறுவனங்கள் ....
அரசுடமையாக்கப்பட்டன .......!
பொய் பேசும் அண்டைநாடுகளுடன் ....
வலுவான ஒப்பந்தம் போட்டனர் ....
தலைவர்கள் கை குலுக்கினர் ....
ஆட்டம் போட்டனர்  சென்றனர் .....!!!

அரசின் இலவசத்திட்டங்கள் .....
பொய் சொல்வோருக்கு அதிகரித்தது ....
மறந்து போய் மெய் சொன்னவர்களுக்கு .....
இலவச திட்டங்கள் நிறுத்தப்பட்டன ....
துரோகிகளாக தனிமைபடுத்தப்பட்டனர்....!
மெய் கட்சி தலைவரை சிறையில் ....
பொய்கட்சி பிரமுவர்கள் சந்தித்தனர் ....
ஒரே ஒரு பொய் சொல் உன்னை ....
விடுதலை செய்கிறோம் என்றனர் ....
என்றோ ஒருநாள் விடுதலை ...
கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் ....
மெய் கட்சி சிறையில் வாடியது ....!!! 

கருத்துகள்

கவிப்புயல் இனியவன்

கவிதை 360 சமூக விழிப்புணர்வு கவிதை

கவிதை 360 தன்னம்பிக்கை கவிதை

கவிதை 360 கலவை கவிதை