இடுகைகள்

கவிதை 360

அகத்திய பகவானே சரணம்

 அகம் மகிழவைக்கும்  அகத்திய பகவானே சரணம்... ! சுழுமுனை நாடியின்...  சூட்சுமத்தை தந்து...  சுத்தமாகும் மனதை...  தந்தவரே போற்றி.... ! சூரிய,  சந்திர, சுழுமுனை...  பணிகளை கூறி....  வாழ்வை சிறக்கவைக்கும்...  குருவே போற்றி..... !!!

கவிதை 360 ஆன்மீக காதல்

 ஆன்மீகம்- காதல் -கவிதைகள் --------------------------------------------- இறைவா...... உன் நினைவோடு தூங்கி..... உன் நினைவோடு எழும்..... அற்புத சக்தியை தா........! உன்னை நினைக்காத..... நொடிப்பொழுதெல்லாம்..... என் உடலை முள்ளினால்...... குற்றும் உணர்வை தா......! ^^^ கவிப்புயல் இனியவன் ஆன்மீக கவிதை ^^^ உன் நினைவோடு...... தூங்குவதை காட்டிலும்..... முள்பற்றைமேல் தூங்குவது..... எவ்வளவோ மேல்.........! தீயால் சூடுபட்டிருகிறேன்..... வேதனை பட்டிருக்கிறேன்........ அத்தனையும் பெரிதல்ல..... உன் பிரிவால் தினமும்.... கருகிக்கொண்டிருக்கிறேன்..... தாங்கமுடியா வலியுடனும்..... மாறா தழும்புடனும்.......! ^^^ கவிப்புயல் இனியவன் காதல் கவிதை

கவிதை 360 போன்சாய்

  போன்சாய் என்பது ஜப்பான் மற்றும் சீனாவில் மரம் வளர்க்கும் முறையாகும். பெரிய மரங்களை சிறிய தொட்டிக்குள் வளர்க்கும் முறையாகும். ஆலமரம் கூட அப்படி வளர்க்கப்படுகிறது. அந்த எண்ணக்கருவை கொண்டு அமைக்கப்படும் ஒருவகை ஹைக்கூவே போன்சாய் கவிதை ஆகும். எனினும் ஹைக்கூவுக்கும் போன்சாய் ஹைக்கூவுக்கும் அடியேன் கூறும் வேறுபாடுகள்.  1) ஹைக்கூவிற்கு ஒரு மரபு உண்டு. ஓரடி ஈரடி, ஈற்றடி, என்ற மரபு உண்டு. ஆனால் போன்சாய்க்கு அப்படி இல்லை. ஆனால் முடிவு திருப்பமாக அமையும்.  2) ஹைக்கூவில் நகைச்சுவையாக அமைந்தால் அது சென்றியு ஆகிவிடும். இங்கு சமூக விழிப்புணர்வு, நகைச்சுவை எல்லாம். ஒன்றாகவே கருதப்படும்.  3) ஹைக்கூவில் மொழிக்கலப்பு ஏற்பதில்லை. இங்கு அது தவறில்லை.  இவை தவிர வேறுபாடு இருப்பின் நீங்கள் கூறுங்கள் நானும் அறிய விரும்புகிறேன்.  .....  கவிஞன் நிகழ்காலத்தை படம் போட்டு காட்டுபவன். அதற்கேப்ப  தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப போன்சாய் அமைத்துள்ளேன்.  ......  1) உலகமே       வைத்தியசாலை ஆக்கியது        கொரோனா  .......  2) காற்றுக்கு என்ன வேலி       யார் சொன்னது        முகக்கவசம்  ......  3) குற்றம் செய்யாதவருக்கும்.    

கவிதை 360 கவிதைக்கும் கவிதை நீ

  வியாழன், 17 நவம்பர், 2016 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கவிஞன் (கவிப்புயல்)..... அறிவியலுக்கும் கவிதை..... அரசியலுக்கும் கவிதை..... அன்புக்கும் கவிதை..... அம்மாவுக்கும் கவிதை..... காதலுக்கும் கவிதை..... கல்விக்கும் கவிதை..... கடவுளுக்கும் கவிதை..... கவிதைக்கும் கவிதை..... பொல்லாதவருக்கும் கவிதை..... பொருளாதாரத்துக்கும் கவிதை..... பொன்னுக்கும் கவிதை..... பொம்மைக்கும் கவிதை..... எழுதுகிறாய் நீ கவிதை , கவிதை , கவிதை..... உன் திறமைக்கு உரிய சந்தர்ப்பம் கிடைக்குமானால்  "வைரமுத்து, வாலி " எல்லோரையும் தள்ளியிருப்பாய் உன் பின்னே..... கவிதையை வாசித்துவிட்டு, எப்படித்தான் இதை எழுதுகிறார்களோ?..... என ஒருவகையான ஆச்சரியம் கலந்த ஏக்கத்துடன் பார்த்த நானும் அரைக்(1/2) கவிஞனானது உன் கவிதையை வாசித்து வாசித்துத் தான். போதாது உனக்குக் கவிப்புயல் பட்டம்..... தொடரட்டும் கவிதைக்கும் தமிழுக்கும் உனது சேவை..... இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். ஆ.இராஜ்மோகன். ஆ. இராஜ்மோகன். நேற்று, 05:21 AM ·  16.11.2016

கவிதை 360 "இ" கவிதை

  இ னிய  இ னிமையான  இ ன்பமான  இ ல்லத்தில்  இ றையருள்மிக்க  இ ல்லறவாழ்க்கை  இ ன்றும் என்றும்  இ றையருளால்  இ டையூறுகள் நீங்கி  இ ன்பமே  இ டைவிடாமல் கிடைக்க  இ ந்தநாள் மட்டுமல்ல  இ தயத்துடிப்பு உள்ளவரை  இ ன்பலோகத்தில் வாழ  இ ந்த  இ னியவனில்  இ தயம் கனிந்த  இ னிய வணக்கம்  இ யன்றவரை அயலவரையும் இ ன்பமாய் வைத்திருங்கள்  இ றைவன் விரும்புவதும்  இ வ்வுலகில் எல்லோரும்  இ ன்பமாய் வாழவைக்கும்  இயல்புடைய மனிதனை தான் ....

கவிதை 360 மூன்றாம் அறிவு

  மூன்றாம் அறிவு -------------------------- "அ" எழுதியவுடன்...... ஆரம்பமாகிவிடும்..... ஏட்டறிவு........! ஏட்டறிவில்..... ஏற்றம் கண்டவரும்........ உள்ளனர்...... ஏட்டறிவு எட்டாதவரும்..... உள்ளனர்.........! ஒவ்வொரு வயதுக்கும்..... ஒவ்வொரு பட்டறிவு....... ஏட்டறிவில்லாமல்....... பட்டறிவால் வாழ்வியலில்..... பட்டதாரியானவர்களும்..... ஏராளம்.........! ஏட்டறிவும் பட்டறிவும்..... போராட்டத்தாலேயே....... பெறப்படுகிறது.......! ஏட்டறிவும் பட்டறிவும்..... ஏதோ ஒருவகையில்..... யாரோ ஒருவரின் சாயல்.... அல்லது நிழலாகவே..... இருக்கிறது...........! சாயல்களும் நிழல்களும்..... காலத்தால் மறைந்துவிடும்... இல்லையேல் அவரவர்...... காலத்துக்கே பொருந்தும்......! இன்றைய உலகுக்குதேவை...... மூன்றாம் அறிவே....... யாருடைய சாயலோ நிழலோ..... இல்லாமல் உனக்கே உரிய...... அறிவே மூன்றாம் அறிவு.......! மூன்றாம் அறிவை...... தன்னுள்ளே அறிந்தவனே..... இன்றைய சாதனையாளன்...... இது ஆளுக்காள் வேறுபடும்..... நிழலாகவும் சாயலாகவும்..... இன்னொருவருக்கு தொடராது..... தொடரவும் முடியாது.....! @ கவிப்புயல் இனியவன்

கவிதை 360 கொரோனா விழிப்புணர்வு

  கொரோனா விழிப்புணர்வுக் கவிதை ......... தடுப்பூசி வரும் வரை.....  தனிமைப்படுத்தலே மருந்து..... ! கட்டிப்பிடிக்காதே.....  கால் கை கழுவி உள்ளே வா...... ! குடும்பத்தோடும் தனித்திரு....  கூட்டம் கூடி பேசாதே... ! கிடைப்பதெல்லாம் உண்ணாதே....  கீரை வகைகளை உண்...! இதை விட கொடியநோய்க்கு...  கொரோனா ஒரு பயிற்சியாகும்...... !!! +++ கவிப்புயல் இனியவன்  மணிபல்லவம்  யாழ்ப்பாணம்  " கவிதைகள் தொடரும் " உடலுக்கு உழைப்பில்லை....! உளத்துக்கு அமைதியில்லை..! உறவுகளுக்குள் இனிமையில்லை.! உண்பதுக்கும் உறங்குவதற்கும்.. திண்டாட்டம்... ! தனிமைப்படுத்தலால் தவிக்கிறேன்..... !!! thumb_up Like thumb_down Dislike   Home 

கவிதை 360 முதுமைவலி

முதுமை..... இளமையின் நினைவை..... எரிந்த சாம்பலாய்..... சுமர்ந்து கொண்டிருக்கும்.... சுமைதாங்கி..........! மரணத்தின் வாசலை....... ஏக்கத்தோடும் பயத்தோடும்....... வரவேற்றுக்கொண்டிருக்கும்...... மர்ம அறை............! அனுபவங்களை....... முற்களாகவும்...... பூக்களாகவும்...... ரசித்துக்கொண்டிருக்கும்..... ரோஜாச்செடி.....! வார்த்தைகளின்..... வீரியமும்....... இன்பங்களின்....... வீரியமும்...... அடங்கியிருக்கும்....... பெட்டிப்பாம்பு..........! எழும்பு கூட்டை..... தோலால் மறைத்து வைத்து...... கிறுக்கள் சித்திரத்துக்கு...... உயிர் கொடுக்கும்..... உன்னதமான உயிர்.........! நூறு மீற்றர் ஓட்டத்தை...... நொடிக்குள் ஓடியவனும்..... மெதுவாக நடக்க .... கற்றுக்கொடுக்கும் ஆசான்......! கொரட்டைத்தான் ....... மூச்சு பயிற்சி........ இருமல் தான் செய்தி..... தொடர்பாளன்........! அனுபவத்தை  மூலதனமாய்...... கொண்டு ஞானியாகும் நிலை..... அனுபவத்தை தவறாக கொண்டு...... பித்தனாகும் நிலை....... முதுமை.....................! @ கவிப்புயல் இனியவன்

கவிதை 360 வலிக்கும் இதயத்தின் கவிதை

  காதற்ற ............ ஊசியும் கூட..... வராது என்பது..... உண்மைதான் ...!!! நீ ............. காதோரம் பேசிய..... வார்த்தைகள்... கல்லறை வரை....... தொடருதே ....!!! உன்னை ''''''''''' கண்ட நாள் முதல்'''''''''''''''' உள்ளங்கையில் இருக்கும்''''''''''''''''' ஆயுள் ரேகை குறைந்து வருகிறது ,,,,!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் கவிதை எண் - 185

கவிதை 360 என் அன்புள்ள ரசிகனுக்கு

  என் அன்புள்ள ரசிகனுக்கு கவிப்புயல் எழுதும் கவிதை --------------------------------------- ஒரு கவிஞன் தன் வலிகளை.... வரிகளாய் எழுதுகிறான் .... ஒரு ரசிகன் அதை ஆத்மா ... உணர்வோடு ரசிக்கிறான் ..... கவிதை அப்போதுதான் ... உயிர் பெறுகிறது .....! # என் உயிரை உருக்கி .... நான் எழுதும் கவிதைகள் என்னை ஊனமாக்கி மனதை ... இருளாக்கி இருந்தாலும் .... கவிதைகள் உலகவலம் வருகிறது ... உலகறிய செய்த ரசிகனே ... உன்னை நான் எழுந்து நின்று .... தலை வணங்குகிறேன் .....! # என்இரவுகளின் வலி...... விழித்திருந்த கண்களுக்கு தெரியும் .... பகலின் வலி அவள் எப்போது .... இரவில் கனவில வருவாள் ....? ஏங்கிக்கொண்டிருக்கும்..... இதயத்துக்கு புரியும் ..... ரசிகனே உனக்குத்தான் புரியும் .... நான் படுகின்ற வலியின் வலி ......! # ஒருதலையாக காதலித்தேன் ... காதலின் இராஜாங்கம் என்னிடம் .... காதலை சொன்னேன் .... என் இராஜாங்கமே சிதைந்தது ..... காதல் ரகசியத்தில் ஒரு துன்பம் .... பரகசியத்தில் இன்னொரு துன்பம் .... காதல் என்றாலே இன்பத்தில் துன்பம் .... கண்டு கொல்லாதே ரசிகனே .....! # என் காதலுக்கு காதலியின் முகவரி ... இன்னும் தெரியவில்லை ... அத