கவிதை 360 கவிதை யில் வினா
என்னுயிர் நண்பா .....
உன்னை விட்டு யாரிடம் ....பகிர்வேன் என் உணர்வை ...?
மனதிலே
துன்பம் வரும்போது .....
என்னோடு இருந்து அழும் ...
ஒரே ஜீவன் நீதானே ....
இன்பம் வரும்போதும் ...
என்னோடு இருந்து ....
சிரிக்கும் ஜீவனும் நீதான் ....!!!
ஒரே ஒரு கவலை உன்னால் .....
நான் அழும்போது தான் அழுகிறாய் ....
நான் சிரிக்கும் போதுதான் சிரிக்கிறாய் ....
எப்போது என்னை நீ அழவைப்பாய்....?
எப்போது என்னை சிரிக்க வைப்பாய் ...?
எப்படி உன்னால் முடிகிறது ...?
என் உணர்வுகளை அப்படியே...
எனக்கு காட்டுகிறாய் ....?
என்மீது கொண்ட கோபத்தால் ....
உன்னை அடித்துவிட்டேன் .....
எனது கையில் குருதி ....
உனது இதயம் சுக்குநூறாகியது.....!!!
*
*
*
என் அந்த நண்பன் யாராக இருக்கமுடியும் ...
கருத்துகள்
கருத்துரையிடுக