கவிதை 360 காதல் டைரி
என்னவளின் டயறி
---
கண்களால் காதல் தந்து ....
நினைவுகளை மனதில் சுமந்து ....
வலிகளால் வரிகளை வடித்து ....
என்னவளின் காதல் டயறி ....
கண்டெடுத்தேன் கணப்பொழுதில் ....
என் மீதுகொண்ட கவலைகளை ....
தன் காகிதத்தில் பதிந்திருக்கிறாள்....
காகிதங்கள் கூட ஈரமாய் இருக்கிறது ....
அவைகூட அழுதிருக்கிறது ....!!!
+
காதல் நினைவுகளும்
காதல் டயறியும்
என்னவளின் பக்கம்( 01)
உயிரற்ற காகித்தத்தில் ....
உயிர் கொண்டு எழுதினேன் ....
உதயனே உயிரானவனே ......!!!
காகிதம் கூட உயிர் பெற்று ....
உன்னையே எழுத சொல்கிறது ....!!!
என் கையெழுத்தை தவிர ....
அத்தனையும் உன் நாமமே ....
கவலைகளை கண்ணீரால் ...
வரிகளாய் எழுதுகிறேன் .....!!!
+
காதல் நினைவுகளும்
காதல் டயறியும்
என்னவளின் பக்கம்( 02)
@@
என் பெயரை தவிர ....
மற்றைய வரிகள் எல்லாம் ....
கண்ணீரால் அழிந்துள்ளன .....
டயறியின் மூன்றாம் பக்கம் ...!!!
என் பெயருக்கு இறுதியிலும் ....
காய்ந்த கண்ணீர்துளியின் ....
தடயங்களும் இருக்கிறது ....
காதலுக்கு முற்றுப்புள்ளியாய்....!!!
+
காதல் நினைவுகளும்
காதல் டயறியும்
என்னவளின் பக்கம் 03
கருத்துகள்
கருத்துரையிடுக