இடுகைகள்

நவம்பர் 27, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிதை 360 பிறந்தநாள் கவிதை

எல்லோருக்கும் பொதுவான பிறந்தநாள் கவிதை   பிறந்து விட்டாய் இந்த   பூமியை புரிந்து கொள்ள   பிறந்து விட்டாய் ....!!! இயந்திரமய உலகம்…….! எதையும் விந்தையாக செய்யும்   அதிசய உலகம் ....!!! விளங்கியும் விளங்காத   மானிடம்……! விளங்க முடியாத பாசம் ... மயங்கி விடாதே .... நொந்துபோய் வெந்து   வீழ்ந்து விடாதே ....!!! தூய சிந்தனைவேண்டும். சிந்தித்ததை சீரியதாய்   செய்ய வேண்டும் .... உனக்காக எனக்காக   வாழவேண்டாம் ........ நமக்காக வாழ கற்று கொள்....!!! வருடங்கள் வருவதும்   அவை நம்மை கடப்பதும்   விந்தையில்லையே   அதற்காக கொண்டாட்டம்   தேவையில்லையே ....!!! கடந்த   வருடத்தில் என்ன ..? செய்தாய் திரும்பி பார் ...!!! இந்த   வருடத்தில் என்ன செய்ய ..? போகிறாய் .. எண்ணிப்பார்   பிறந்த நாளில் ஒரு சபதம் எடு   இருக்கும் தீய குணத்தை   அழித்துவிடு ....!!! பிறப்புகளில் உயர் பிறப்பு   மானிட பிறப்பு .... இப்பிறப்பில் நீ எல்லாம்   பெறவும் .... பெற்றவற்றை உலகிக்கு   பகிரவும் வாழ்த்துகிறேன்   மகிழ்கிறேன் உன் பிறந்த   தினத்தை நினைத்து .....!!! வாழ்க வளமுடன்   மிளிர்க தமிழுடன் ....!!! @ கவிப்புயல் இனியவன் 

கவிதை 360 இரண்டு- வரிக்கவிதை

  இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து !!!.....................அம்மா........................!!! எந்த பல்கலைகழகத்திலும் கற்கவில்லை எல்லா அம்மாக்களும் வைத்தியர்கள்......! ^^^ அன்னையை அன்னையர் இல்லத்தில் விடாதீர்...... அன்னை இருக்கும் வீடுதான் அரண்மனை.........! ^^^ உலகின் தியாகி யார் என்று கேட்டேன்....... அன்னையை சொல்லாமல் மூடர்களின் பதில்.........! ^^^ பிசைந்த சோற்றை அருவருக்காமல் ......... சாப்பிடும் ஒரே ஒரு உறவு அம்மா........! ^^^ எப்போது நினைத்தாலும் கண்ணீர்...... அன்னையை தவிர யாரும் இல்லை.....! @@@ இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து கவிப்புயல் இனியவன்

கவிதை 360 தொழிலாளர் தினக் கவிதை

  தொழிலாளர்  தினக் கவிதை  ^^^^^ உழைத்து உழைத்து உடல் தேய்ந்தது .... உழைத்து உழைத்து உளம் சோர்ந்தது .... உழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை .... ஊதியத்தில் வாழ போதுமானதுமில்லை .... உழைப்பாளர் உரிமைகள் இழந்தனர்....! களைப்பில் உழைப்பின் முதுகு .... கேள்விக்குறியாய் வளைந்தது .... சளித்து ,வெறுத்து ,கொண்டனர் .... அடக்கப்பட்டனர், ஒதுக்கபட்டனர் .... திருத்தி கொண்டனர் உழைப்பாளர் .....! தூங்கியவர்கள் விழித்து கொண்டனர் .... திரட்டி கொண்டனர் தம்பலத்தை ..... நுழைந்தது கேள்விகள் ஆயிரம் ஆயிரம் .... நிமிர்ந்தன தோள்கள் எழுந்தன கைகள் .... வெடித்தது தொழிலாளர் போராட்டம் .....! நோக்கம் நிறைவேறும்வரை ...... உக்கிரமானது சர்வதேசப் புரட்சி...... உழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் .... உழைக்கும் நேரம் எட்டுமணியாக ..... உரிமையை போராடி வென்றனர்.....! போராடி வென்ற தொழிலாளர் தினம் ..... பேச்சளவில் இன்று சட்டத்திலும் ... சிகப்பு வர்ண கொடிகளிலும் வாழ்கிறது ... மனத்தால் உழைப்பின் புனிதத்தை ... உணரும் நாள் என்று உதயமாகிறதோ .... அன்றே உண்மைதொழிலாளர் தினம் ......! @ கவிப்புயல் இனியவன்  யாழ்ப்பாணம் வட இலங்கை

கவிதை 360 மொழிக்கவிதை புத்தாண்டு

  வருக வருக புத்தாண்டே வருக ...... தருக தருக இன்பவாழ்க்கை தருக...... பொழிக பொழிக வளம் பொழிக ..... வாழ்க வாழ்க உயிரினங்கள் வாழ்க ......!!! போ போ பழைய ஆண்டே போ ..... ஓடு ஓடு துன்பங்களோடு ஓடு ..... போதும் போதும் துன்பங்கள் போதும் .... ஐயோ ஐயோ தாங்காது மனம் ஐயோ....!!! அணு அணுவாய் பெற்றோம் இன்பம் ..... வண்ண வண்ண கனவுகள் கண்டோம் .... விடிய விடிய கண் விழித்து உழைத்தோம் .... ஓட ஓட நினைக்க வைத்தது காலம் .......!!! இனிக்க இனிக்க வாழ்கையை தா புத்தாண்டே .... அன்பான அன்பான உறவுகளை தா புத்தாண்டே... உழைக்க உழைக்க உடல் உறுதியை தா புத்தாண்டே... நினைக்க நினைக்க ஞானத்தை தா புத்தாண்டே.....!!! ^^^ மொழிக்கவிதை கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம்

கவிதை 360 ஒருவரி கவிதை

  சிறகு இல்லாமல் பறக்க முடியும் காதல் செய்  ******** தனிமையிலும் இனிப்பது காதல் ********* நினைவுகள் நாளாந்தம் சண்டையிடுவது காதல்  ******** கண்ணில்விதைதூவி மனதில் வளரும் மரம்காதல்  ******** தொட்டது நீ மனத்தால்  கெட்டது நான் ...!!! ******* & ஒரு வரியில் கவிதை  கவிப்புயல் இனியவன்

கவிதை 360 பொங்கல் கவிதை

  இனிய பொங்கல் வாழ்த்துகள் ....... இனிய உழவர் திரு நாள் வாழ்த்துக்கள் இனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள் இனிய மகர ஜோதி வாழ்த்துக்கள் இனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்........!!! இனிக்க இனிக்க பொங்கல் பொங்கி..... இன்னும் பல சுவை பலகாரங்கள் படைத்து... இல்லறத்தில் இறைவன் அருள் பாலிக்க...... இல்லாதருக்கும் அள்ளிக்கொடுத்து...... இல்லறம் நல்லறமாக செழித்திட....... இனியவனின் இனிய வாழ்த்துக்கள்.....!!! இல்லங்களில் பொங்கலை பங்கிட்டு...... இல்லத்தாரோடும் உறவுகலோடும்..... இன்முகத்தோடு பொங்கலை உண்டு..... இன்முகம் முகம் மலர்ந்து சுவைகும்...... இனிய உறவுகளுக்கு  இனியவனின்...... இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......!!! இரவு பகலாய் வயலில் புரண்டு...... இதய மகிழ்ச்சியோடு பயிரை வளர்த்து..... இன் முகத்தோடு அறுவடை செய்து..... இவுலகுக்கே உணவு படைக்கும்..... இறைவனுக்கு ஒப்பான உழவர்களுக்கு..... இனியவனின் இனிய வாழ்த்துக்கள்.....!!!  @ கவிப்புயல் இனியவன் 

கவிதை 360 வாழ்க்கை கவிதை

  வெள்ளை வேட்டி கட்டி .. கழுத்தில் சங்கிலி போட்டு ... சட்டை பைக்குள் -பணம்  தெரியும் படி வைத்து .... போகிறவரை -எல்லோரும்  கும்பிடுறாங்க ..சாமி  என்கிறாங்க ...!!! ஞானத்தில் பழுத்து .... அதிகமாக பேசாமல் ... ஊத்தை துணியுடன் ... ஞான பார்வையுடன் ... என் அருகில் ஒருவர் .... நிற்கிறார் -அவர் கேட்காமல்... காசை போடுகிறார்கள் ... பிச்சையாக ...!!! என்ன உலகமடா ... புறத்தோற்றத்தை...  பார்த்து எவ்வளவு .... காலம் தான் ஏமாறும்....  இந்த உலகம் ...!!! ^ வாழ்க்கை கவிதை  கவிப்புயல் இனியவன்

கவிதை 360 அகராதியில் கவிதை

அழகு அழகு தமிழ் போல் நீ அழகு ... அகங்காரம் கொண்டவளே நீ அழகு .... அலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு .... அகடவிகடம் கொண்டவளே நீ அழகு .... அகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....!!! அகம் முழுதும் நிறைந்தவளே ..... அகமதியால் காதலை இழந்தவளே.... அகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ...... அகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் .... அக்கினியால் கருகுதடி நம் காதல் ....!!! அச்சப்படாதேயடா என்னவனே ..... அச்சுதனடா என்றும் நீ எனக்கு ..... அகந்தையும் அகமதியுமில்லை .... அடர்த்தி கொண்டதடா நம் காதல் ...... அகிலம் போற்றும் காதலாகுமடா ....!!! அடைமழை போல் இன்பம் தந்தவளே .... அந்தகாரத்தில் வந்த முழுநிலவே ..... அபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி .... அகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் .... அகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...!!! அகமதி  - செருக்கு அகோராத்திரம்  - பகலும் இரவும் அந்தகாரம்  - இருள் கவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை கவிப்புயல்  இனியவன் ( 2014 ல் என் முயற்சி )

கவிதை 360 தத்துவக்கவிதை

 16) தத்துவக்கவிதை  ....  ஞாபக சக்தி குறைவானவர்கள் .... காதலில் பொய்சொல்ல .... முயற்சிக்க கூட்டாது .... அதுவே சந்தேகமாக .... உருப்பெற்று விடும் ....!!! பெற்றோர் காதலித்து .... திருமணம் செய்தாலும் ... பிள்ளைகளின் காதலுக்கு .... தடையாகவே இருப்பார்கள் இல்லையேல் விருப்பம் .... இன்றி ஏற்கிறார்கள் ....!!! காதலின் பின்னால் ஓடாதீர் .... காதல் இல்லாமலும் வாழாதீர் .... காதல் பேச்சை கூட்டி .... மூச்சை நிறுத்தும் ,,,,,!!! + கவிப்புயல் இனியவன் காதல் தத்துவ கவிதை

கவிதை 360 பழமொழியும் கவிதையும்

 15) பழமொழியும் கவிதையும்  .......  காக்கை  அன்னநடை...... நடக்க போய்  தன்நடையை..... கெடுத்ததுபோல்.....! உன் உறவை...... நம்பி -என் உறவுகள்...... எல்லாவற்றையும்....... இழந்து தவிக்கிறேன்.....! ^^^ பழமொழியும் காதல் கவிதையும்  ....  ஆற்றில் போட்டாலும்...... அளந்து போடு.........! அளவில்லாமல்........ காதல் கொண்டேன்....... அவஸ்தையையே..... வாழ்க்கையாக...... பெற்றுக்கொண்டேன்......! ஆற்றின் ஆழத்தை........ கண்டுவிடலாம்...... காதலின்  அழத்தை..... படைத்தவன் கூட...... அழக்க முடியாதே........! ^^^ பழமொழியும் காதல் கவிதையும்  கவிப்புயல் இனியவன்

கவிதை 360 கானா கவிதை

 14) கானா கவிதை  ......  அறிமுகம் செய்தவர் : கவிப்புயல் இனியவன்  ....  Sep 17, 2015 10:53 pm ஆறடி பனை போல்  வளர்ந்திருக்கும் பெண்ணே யாரடி சொன்னது ஓரடி குட்டை  பாவாடை போடச்சொல்லி .....? குதிக்கால் செருப்பணிந்து குதிரைபோல்போனவளே  குதி இருக்குதுகால் எங்கே ...? கை பைக்குள் காசை தவிர  கண்டதையும்வைதிருந்தவளே  கை இருக்குதுகைப்பை எங்கே ...? கண்டதையும் பூசி அழகு காட்டியவளே.... பூசுவதற்கு வர்ணங்கள் இருக்கு ... உன் முகம் எங்கே .....? முகம் இருக்குது அழகு எங்கே ..? கானா கவிதை  கவிப்புயல்   இனியவன்

கவிதை 360 காதல் வெண்பா

 13) காதல் வெண்பா  .....  இனியவன் காதல் வெண்பா ..... எங்கே வருகிறாய் ஏங்கி துடிக்குது - இதயம்  அங்கேயே சுழன்று தெரியுது மனசு -நீ  பூவுக்குள் உதயமாகியவள் - நீ அனுமதித்தால்  பூ மாலையாக மாற துடிக்கிறேன் ....!!!.  .... அன்ன நடை நடந்து என்னை கொன்றவளே  அன்னம் தண்ணியில்லாமல் தவிக்க வைத்தவளே  உள்ளம் ஒரு காதல் கோயிலடி - அதில் நீ  உள்ளிருக்கும் கருவறை தெய்வமடி....!!!  ..... சொல்லாமல் கொள்ளாமல் இதயத்தில் நுழைந்து  கொல்லாமல் கொல்லுகிறாய் விடலை என்னை  சித்தியை துணைக்கு அழைத்துவந்து -இதயத்தை  சித்தரவதை முகாம் ஆக்கி விட்டாய் .....!!!  .... விழி அழகி என்று நீ பெயர் கொண்டதாலோ  விழி மூடாமல் என்னை செய்து விட்டாய்  தெருவெங்கும் நிற்கும் மாந்தரெல்லாம் -உன்  திருமுகமாய் தெரிய என்ன செய்தாய் ...?  .... காலமெல்லாம் காத்திருப்பேன் உனக்காக  காலனிடம் கெஞ்சி கேட்பேன் என் ஆயுளை  மாதவம் செய்தேனும் உனை அடைவேன் -அன்றேல்  மாண்டு விடுவேன் உன் காலடியில் மண்ணிட்டு...!!!  &  கவி நாட்டியரசர் இனியவன்  காதல் வெண்பா ....  முதல் அடியின் ஓசை இரண்டாம் அடியிலும் வரவேண்டும் 

கவிதை 360 கதைக்கு கவிதை

 12) கதைக்கு கவிதை  ....... கவிதை வடிவில் மங்கையர்க்கரசியின் காதல் !!!...................மங்கையர்க்கரசியின் காதல் ........................!!!  இது ஒரு வரலாற்று சிறுகதை வ.வே.சு. ஐயர் அவர்கள் எழுதிய வரலாற்று கதை . இதனை பல இடங்களில்  வாசித்து எடுத்த தகவலில் இருந்து இதனை கவிதை வடிவில் அமைக்க ஆசைப்பட்டேன் .என்னால் முடிந்த  வரை எழுதியுள்ளேன் . வசித்து பயன் பெறுவீர்களாக .....!!!  !!!................மங்கையர்க்கரசியின் குணயியல்பு ...........................!!!  கருணாகர தொண்டமானின் தவப்புதல்வி........  ..........எதற்கு அஞ்சாத வீரமங்கை.......................  பத்திர காளிமீது பக்தி கொண்டவள் .................  ..........பத்தினியாள் பக்தியாள்............................  சின்ன வயதிலேயே தந்தையை இழந்தாள் ........  .........சினப்பனோடு சீராக வளர்ந்தாள்...............  சின்னப்பனின் திணிப்புக்கு உள்ளானாள்..........  .........சீற்றம் கொண்டாள் சிங்கம்போல் ............  சித்தப்பனின் திருமணதிணிப்பை தூக்கியெறிந்தாள் .....!!!  !!!............மங்கையர்க்கரசியின் காதலன்குணயியல்பு .................!!!  தந்தை பெயரோ

கவிதை 360 இரண்டு

 11) இரண்டு வார்த்தையில் கதை  .......   கதைதான் இரண்டு வார்த்தைகளில் முடிய வேண்டும். தலைப்புக்குக் கணக்கு இல்லை. ------------- தலைப்பு ; பத்துமணி நேரத்துக்கு மேல் புடவைக்கடைக்குள் மனைவி .வரவேற்பாளர் மண்டபத்தில்  குழந்தையுடன் கணவன் . ஒரு ஒட்டு துணிகூட மனைவி வாங்கவில்லை . கடுப்படைந்தார் கணவன் . கதை ; செலக்சன் சரியில்லை @ கவிப்புயல் இனியவன்  .... இவ்வாறு 10 கதை எழுதியுள்ளேன் 

கவிதை 360 அணுக்கவிதை

 அணுக்கவிதை  ....  உன்  பார்வைக்கு அஞ்சி நீ அருகில் வரும்போது மறு தெருவுக்கு போகிறேன். ..... உன்னை நான் நேரில் ரசிப்பதை விட கவிதையில் ரசிப்பதே அழகாய் இருகிறாய். .... ஒவ்வொருவனுக்கும் அவனவன் காதல் தான் ஆயுள் பாசக்கயிறு. ..... இதயம் மட்டும் வெளியில் இருந்திருந்தால் நிச்சயம் நீ அழுதிருப்பாய் என்னை ஏற்றிருப்பாய். ..... பெண்ணை பற்றி நான் கவிதை எழுதியதில்லை உன்னை பற்றியே கவிதை எழுதுகிறேன்.

கவிதை 360 வசனக்கவிதை 01

 அதிசயக்குழந்தை - பூதம்  ------- ஒட்டு துணிகூட இல்லாமல் ... பிறந்த மேனியோடு கட்டாந்தரையில் .... புழுதி மண்ணுக்குள் உருண்டு பிரண்டு .... விளையாடிகொண்டிருந்தான் .... அதிசயக்குழந்தை ....... டேய் எழுந்திரு என்று அதட்டினேன் ... எதற்கு என்று கேட்டான் அவன் ....!!! மண்ணுக்குள் விளையாடுகிறாயே .... உடம்பு முழுக்க அழுக்கு படுத்தே ... என்றேன் .... நீங்க மட்டும் அழுகில்லையோ...? என்றான் அவன் - மேலும் சொன்னான் .... ஆசானுக்கு  நான் சொல்வதா ...? ஊழ்வினை உடம்பே அழுக்குதான் .... பஞ்ச பூத கூட்டுத்தானே உடம்பு ....!!! மனத்தின் அழுக்கை நீக்க  கண்ணீரால் (தண்ணீர் ) கழுவுகிறீர்கள் .... உடலின் அழுக்கை நீக்கவும் ... தண்ணீரால் கழுவுகிறீர்கள் .... கோபப்படும் போது " நெருப்பாய்" கொதிக்குறீங்க .. உள்ளத்தை துளைக்கும்  சொல்லை ... காற்றோடு கலக்கிறீங்க .... உங்களின் அசுத்தம் ஆகாயத்தையும் ... அசுத்தமாக்கும் போது  நான் இந்த மண்ணில் புரளுவது மட்டும்  உங்களுக்கு அழுக்காய் தெரிகிறதோ ....? என்றான் - அதியக்குழந்தை.....!!! போதும் போதும் உன் வியாக்கியானம் .. என்று கூறிக்கொண்டு ஒரு சிறு தடி எடுத்து ... அதட்டினேன் ..... வி