கவிதை 360 புதுக்கவிதை
அகோர மழை
சாதாரண துளியுடன் ஆரம்பித்தது ...
கொட்டி தீர்த்த அகோர மழை ....!!!
வீதியோரகடையொன்றில் கூரையில் ...
கூட்டத்தோடு கூடமாய் நடப்பதை....
பார்த்துக்கொண்டிருந்தேன் ......!!!
வீதியிலிருந்த குழிகள் பள்ளங்கள் ...
எவையும் தெரியாமல் நிரம்பிவழிய .....
சிற்றாறொன்று சிறுவீதியால் திசை ...
திரும்பி வந்ததோ என வாயை .....
பிளக்கும் பெருவெள்ளம் .....!!!
தள்ளுவண்டியில் காய்கறிகாரன் .....
தள்ளிவந்த வண்டிதான் மிஞ்சியது ...
காய்கறிகளைகாணோம்......
பள்ளத்திலா குழிக்குள்ளா....?
தேடிப்பார்க்கும் நிலையிலில்லை .....!!!
நடைபாதையருகில் பெட்டிக்கடை ...
பழவியாபாரி தான் நனைந்தபடி ....
பழங்களுக்கு போர்வை போத்து ...
இழந்த வருமானத்தை வரண்ட ...
மனத்துடன் காத்திருக்கும் நிலை ...!!!
சிரித்தபடி வந்த காதல் ஜோடியின் ...
மோட்டர்சைக்கிள் செயலிழக்க ...
உயிரை கொடுத்து உதைக்க ....
இயங்கமறுக்கும் சைக்கிளை ....
கவலையோடு பார்க்கும் காதலர் நிலை ....!!!
என்னருகில் நின்ற சிறுபையன் ...
மழையில் நனைய ஆசைப்பட்டு ....
தாயின் கையை உதறியபடி கூரை ...
தண்ணீரை ஏந்த - அதைமறுத்தார் தாய் ...
அடம்பிடிக்கும் குழந்தையின் மனம் .....!!!
இரண்டு மூன்று அடிகள் எடுத்துவைத்தேன் .
அவசரத்தில் வந்த வைத்தியசாலை வண்டி ...
அழகாக என்னை சேற்று நீரால் குளிப்பாட்ட ....
வீட்டுக்கு செல்வதா வேலைக்கு செல்வதா...?
இருதலை கொள்ளி எறும்பின் நிலை ....!!!
இத்தனை காலமும் அகோரமழை ....
பொழியும் கனவளவு தண்ணீரெண்டு....
தப்பாக புரிந்து கொண்டேனோ ...?
இத்தனை அகோரங்களை ஏற்படுத்தியமழை
அகோர மழைதானே .....!!!
கருத்துகள்
கருத்துரையிடுக