கவிதை 360 போராட்டகவிதை

 எதிர் .....

காலத்தை யோசி ...
நிகழ்காலத்தை நேசி .....
அதிகளவு நுகராதே .....
அளவுக்கு அதிகமாய் .....
ஆசைப்படாதே .....!!!

உணவு 
வாழ்க்கைக்கு தேவை.....
உணவே வாழ்க்கையாய் ....
வரத்தேவையில்லை .....
அதிக உணவு அடுத்தவர் .....
உணவை பறிக்கிறது .....!!!

சூழல் அக்கறையின்மையும் ...
அழிக்கப்போவது உன்னையும் 
உன் பரம்பரையை... !!!

பட்டறிந்த ......
பலர் சொன்னாலும் ...
கற்றறிந்த மேதைகள்....... 
சொன்னாலும் ...
கட்டறுத்த மாடுகளாய் ...
ஏனிந்த சமுதாயம் ....? 

கருத்துகள்

கவிப்புயல் இனியவன்

கவிதை 360 சமூக விழிப்புணர்வு கவிதை

கவிதை 360 கிறிஸ்மஸ் வாழ்த்துக்கவிதை

கவிதை 360 கலவை கவிதை