இடுகைகள்

நவம்பர் 25, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிதை 360 வசனக்கவிதை

 வசனக்கவிதை  அதிசய குழந்தை அவன் ... ஆசான் நான் ... என்னைவிட அவனே முன்னுக்கு " அ " நான் "ஆ " இந்த குழந்தை இப்படியெல்லாம் .... பேசுமா....?  சிந்திக்குமா ...? நம்ப முடியவில்லை என்போர் ... இந்த கவிதையை மூடிவிட்டு  போகலாம் ....!!! இந்த குழந்தை என்னதான்  சொல்லப்போகிறது என்பதை ... பார்க்க விரும்புவோர் .... பொறுமையோடு காத்திருந்து .... தொடராக வரும் வசனக்கவிதையை .... பாருங்கள் .....!!! அதிசயக்குழந்தை .... எப்படி இருப்பான் ...? ஆசான் நேரான சிந்தனையில் ... பேசினால் அவன் எதிர் சிந்தனையில்  பேசுவான் . ஆசான் எதிர் சிந்தனையில்  பேசினால் அவன் நேர் நித்தனையில் ... பேசுவான் - ஆனால் அர்த்தம் இருக்கும் ....!!! ஆன்மீகம் பேசுவான்  அரசியில் பேசுவான்  இல்லறம் பேசுவான்  எல்லாமே பேசுவான்  இலக்கண தமிழில் உரைப்பான்  இந்தாங்கோ என்று பேச்சு தமிழிலும்  பேசுவான் .... கசப்ப்னான உண்மைகளை உரைப்பான் ... இனிப்பான பொய்களையும் சொல்வான் ... மொத்தத்தில் அதிசய குழந்தை  இடையிடையே அதிர்ச்சியை .... தருவான் என்பது மட்டும் உண்மை ....!!! ^ அதிசயக்குழந்தை   வசனக்கவிதை  கவிப்புயல் இனியவன்

கவிதை 360 திருக்குறள் கவிதைகள்

 திருக்குறள் கவிதைகள்  ......... திருக்குறளை கவிதயாக மாற்றி எழுதும் என் சிறு முயற்சியில் முதலில் " இன்பத்துப்பால்"  எனும் பகுதியை கவிதை ஆக்கியுள்ளேன் இதனை முதல் முயற்சியாக அடியேன் வடிவமைத்துள்ளேன்.  ....  பெண்ணே நீ யார் ....? என் கண்ணில் மின்னலாய்... பட்டவளே - பெண்ணே ....!!! நீ - பிரம்மன் படைப்பில் ... தங்க மேனியை தாங்கிய  நான் கண்ட தெய்வீக தேவதையா ...? தோகை விரித்தாடும் மயில்  அழகியா ..? எனக்காகவே இறைவனால்  படைக்கப்பட்ட .... மானிட பெண் தாரகையோ ...? கண்ட நொடியில் வெந்து  துடிக்குதடி -மனசு  பெண்ணே நீ யார் ....? குறள் - 1081 தகையணங்குறுத்தல் அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை  மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.   திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 01 ....  இவ்வாறு அனைத்தும் வடிவமைத்துள்ளேன்  நன்றி

கவிதை 360 திருக்குறள் சென்றியு

 08) திருக்குறள் கவிதைகள்  திருக்குறள் சென்றியு  .......... அறத்துப்பால் -கடவுள் வாழ்த்து - அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு (01) கவிப்புயல் இனியவன் திருக்குறள் -சென்ரியூ எழுத்தின் தாய் உலகின் தாய் -அகரம் - ..... அறத்துப்பால் -கடவுள் வாழ்த்து - மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் (02) **** கவிப்புயல் இனியவன்  திருக்குறள் -சென்ரியூ 02 ********** இறை சிந்தனை தொடர் சிந்தனை -நீடிய வாழ்வு - ..... இவ்வாறு 50 க்கும் மேற்பட்ட சென்றியு எழுதியுள்ளேன்  நன்றி

கவிதை 360 கஸல் கவிதைகள்

கஸல் கவிதை  இக் கவிதை பல மொழிகளை கொண்டு ஆராய்ச்சி செய்யப்பட்டுகிறது. இங்கு யான் இது எவ்வாறு எழுதுவது என்று பார்க்கிறேன்  .... தமிழில் கவிகோ அப்துல் ரகுமான் அவர்கள் நல்ல வடிவம் கொடுத்தார். அதனையே பெருமளவு பயன்படுகிறது.  ..... பொதுவாக கஸல் காதல் வலியை சொல்லும் கவிதை  முறை . ( மற்ற வகைகளும் எழுதலாம் ) இதில் 3 சந்தங்கள் குறைந்தது எழுதணும்  ( 5 .7 வகையிலும் எழுதலாம் ) ஒரு சந்தத்துக்கும்  மற்றையத்துக்கும் தொடர்பு வர கூடாது . அதிக சொற்கள் பயன்படுத்த கூடாது  ஒரு வரி நேராக (+) இருந்தால் மற்ற வரி எதிராக இருக்கணும் (-) 3 சாந்தமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படக்கூடாது  ஆனால் 3 பத்தியும் வெளிப்பதும் தாக்கம் ஒரே கருத்தாக இருக்க வேண்டும் .... உதாரணத்துக்கு ஒரு கவிதை  ----- வலமிருந்து .... இடமாக காதல் ... தேவதையை சுற்றி .... வரவேண்டும் .....(+) நம் காதல் தோஷம் .... இடமிருந்து வலமாக .... சுற்றுகிறேன் .......!!!(-) ----- 01 வாடி விழும் பூவின் .... நெத்து மரமாகி .... மீண்டும் பூக்கும் ...(+) நீ வாடித்தான் .... விழுந்தாய் ...... பூவின் மென்மை கூட ..... உன்னில் இல்லை ....!!!(-) -----02 அடுத்த ஜென்மத்தில் ....

கவிதை 360 சீர்க்கூ கவிதைகள்

சீர்க்கூ கவிதைகள் ... காலந் தோறும் அடிவரையறையைக் கொண்டு தமிழ் இலக்கியங்களை வகைமை செய்யப்பட்டுள்ளன. இந்தச் சீர்க் கவிதைகள் ஒரே ஒரு அடியில் முடிந்துவிடுவதால் அடிக் கவிதை எனப் பெயர் சூட்டாமல் ஒன்றிரண்டு சீர்களில் கவிதை முடிந்துவிடுவதால் சீர்க்கூ எனப் பெயர் சூட்டியுள்ளேன். ஒன்றிரண்டு சீர்களில் கவிதை இயற்றுவதென்பது அவ்வளவு எளிதல்ல. வடிவத்திற்கேற்ப உள்ளடக்கத்தில் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அந்தக் கவிஞனின் கடமையாகிறது. கவிதையின் வடிவ சுருக்கத்தால் இருண்மை / கூடார்த்தம் ஒரு உத்தியாகி விட்டது. கவிதையின் தலைப்புக்கேற்பவே உள்ளடக்கத்தின் பொருளை வாசகர்கள் விரித்துரைத்துக் கொண்டால் இருண்மையைத் தவிர்க்க முடியும். கால வேகத்துக்கு இந்த வடிவத்தை நவீனக் கவிதை உலகம் வரவேற்கும் என நம்புகிறேன். - ம. ரமேஷ் ( இவர் எனது மதிப்புக்குரிய முனைவர் ம. ரமேஷ். கவிதையை ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர் ) ..... கவிப்புயல் இனியவன் சீர்க்கூ கவிதைகள்  01) மரம் உயிர்களின் நுரையீரல்  02) முகில் வரைவோன் இல்லாத சித்திரங்கள்  03) வியர்வை உழைப்பாளியின் வெள்ளைக்குருதி  04) மனம் குரு இல்லாத