கவிதை 360 வாழ்க்கை தத்துவ கவிதை

பசுவிடம் சாந்தம் உண்டு.....

யானையிடம் பொறுமையுண்டு ....
நரியிடம் பகிரும் பண்புண்டு .....
புலியிடம் வீரமுண்டு .....
சிறுத்தையிடம் வேகம் உண்டு .....
நாயிடம் நன்றியுண்டு .....
குரங்கிடம் கொள்கையுண்டு ....
சிங்கத்திடம் ஆளுமையுண்டு ....
குதிரையிடம் வலிமையுண்டு ....
மானிடம் அழகு உண்டு .....
முயலிடம் மென்மையுண்டு.....
பூனையிடம் தூய்மை உண்டு .....!!!
&
இத்தகைய குணத்தை இழக்கும் ....
மனிதா - எப்படி சொல்வாய் .....
இன்னொருவனை பார்த்து .....
நீ மிருகமடா  என்று .....?

^
வாழ்க்கை தத்துவ கவிதை 
கவிப்புயல் இனியவன் 

கருத்துகள்

கவிப்புயல் இனியவன்

கவிதை 360 சமூக விழிப்புணர்வு கவிதை

கவிதை 360 கிறிஸ்மஸ் வாழ்த்துக்கவிதை

கவிதை 360 கலவை கவிதை