இடுகைகள்

கவிதை 360 சமூக விழிப்புணர்வு கவிதை

  சமூக தளங்கள் ........ சமூகத்தை சீர் படுத்தும் ...... தளங்களாக இருக்கவேண்டும் ..... சீரழிக்கும் தளங்களாக....... மாறிவிடக் கூடாது ......!!! இராணுவ புரட்சி மூலம்..... ஆட்சியை மாற்ற இருந்தவர்களை..... சமூகதள தகவல் மூலம் மக்கள்..... புரட்சி வெடித்து இராணுவ புரட்சி..... தோற்கடிக்கப்பட்டற்கு சமூக தள..... செய்தி பரிமாற்றம் உதவியதை..... யாரும் மறந்திடமாட்டார்கள்.........!!! தலைவன் இல்லாமல் தம் இன..... பண்பாட்டை இளைஞர் போராட்டமாய்..... போராடி வெற்றி கண்ட ஜல்லிக்கட்டு...... போராட்டம் சமூக தள பரிமாற்றம்..... உலகையே திரும்பி பார்க்கவைத்து...... உலக புரட்சியின் புதிய பரிமாற்றத்தை..... படைத்தது சமூக தள ஆயுதம்........!!! மறுபுறத்தில் வேதனையான ....... சகிக்க முடியாத தகவல் பரிமாற்றம்......... நடைபெற்றுகொண்டிருப்பதும் ........ மறுப்பதற்கில்லை......... தனிப்பட்ட பகைமைக்கும்......... விருப்பு வெறுப்புக்கும் சமூகதளம்...... பயன்படுவது வேதனை அளிக்கிறது.........!!! எங்கோ நடைபெற்ற நிகழ்வை....... திரித்து கூறுதல் பொருத்தமற்ற...... ஊகங்களை மக்கள் மத்தியில்...... பரப்புதல் ஒருவகை சமூக குற்றமே...... உண்மையை பல...

கவிதை 360 முதுமை.

  முதுமை..... இளமையின் நினைவை..... எரிந்த சாம்பலாய்..... சுமர்ந்து கொண்டிருக்கும்.... சுமைதாங்கி..........! மரணத்தின் வாசலை....... ஏக்கத்தோடும் பயத்தோடும்....... வரவேற்றுக்கொண்டிருக்கும்...... மர்ம அறை............! அனுபவங்களை....... முற்களாகவும்...... பூக்களாகவும்...... ரசித்துக்கொண்டிருக்கும்..... ரோஜாச்செடி.....! வார்த்தைகளின்..... வீரியமும்....... இன்பங்களின்....... வீரியமும்...... அடங்கியிருக்கும்....... பெட்டிப்பாம்பு..........! எழும்பு கூட்டை..... தோலால் மறைத்து வைத்து...... கிறுக்கள் சித்திரத்துக்கு...... உயிர் கொடுக்கும்..... உன்னதமான உயிர்.........! நூறு மீற்றர் ஓட்டத்தை...... நொடிக்குள் ஓடியவனும்..... மெதுவாக நடக்க .... கற்றுக்கொடுக்கும் ஆசான்......! கொரட்டைத்தான் ....... மூச்சு பயிற்சி........ இருமல் தான் செய்தி..... தொடர்பாளன்........! அனுபவத்தை மூலதனமாய்...... கொண்டு ஞானியாகும் நிலை..... அனுபவத்தை தவறாக கொண்டு...... பித்தனாகும் நிலை....... முதுமை.....................! @ கவிப்புயல் இனியவன்

கவிதை 360 கவிதை யில் வினா

என்னுயிர் நண்பா ..... உன்னை விட்டு யாரிடம் .... பகிர்வேன் என் உணர்வை ...? மனதிலே  துன்பம் வரும்போது ..... என்னோடு இருந்து அழும் ... ஒரே ஜீவன் நீதானே .... இன்பம் வரும்போதும் ... என்னோடு இருந்து .... சிரிக்கும் ஜீவனும் நீதான் ....!!! ஒரே ஒரு கவலை உன்னால் ..... நான் அழும்போது தான் அழுகிறாய் .... நான் சிரிக்கும் போதுதான் சிரிக்கிறாய் .... எப்போது என்னை நீ அழவைப்பாய்....? எப்போது என்னை சிரிக்க வைப்பாய் ...? எப்படி உன்னால் முடிகிறது ...? என் உணர்வுகளை அப்படியே... எனக்கு காட்டுகிறாய் ....? என்மீது கொண்ட கோபத்தால் .... உன்னை அடித்துவிட்டேன் ..... எனது கையில் குருதி .... உனது இதயம் சுக்குநூறாகியது.....!!! * * * என் அந்த நண்பன் யாராக இருக்கமுடியும் ...

கவிதை 360 ஒருதலை காதல்

  நல்லவேளை ..... உன்னை ஒருதலையாக .... காதலித்தேன் ..... நீ காதலனோடு வந்து .... நலம் விசாரித்தபோது ..... உதடு சிரித்தது .... இதயம் கண்ணீர் விட்டது ....!!! போகட்டும் விட்டுவிடு ..... எனக்கென்ன தோல்வியென்ன ....? புதிதா ...? நல்லவேளை உயிரே .... உனக்கு வேதனையில்லை ... அதுபோதும் என் காதலுக்கு ....!!! + ஒருதலை காதல் உறவுகளுக்காய் .... கவிப்புயல் இனியவன்

கவிதை 360 வலம்புரியில் என் கவிதை

  அம்மா கவிதை அம்மா - இறைவனின் உன்னத படைப்பு ....  அம்மா - இறைவனாக பார்க்கப்படும் பிறப்பு ....  அம்மா - ஒவ்வொரு இதயத்திலிருக்கும் சாமி .....  அம்மா - இன்ப துன்பத்தை தாங்கும் கடவுள் ....  அம்மா - எல்லா உயிரினங்களின் மூல கடவுள் ....!!!    என்று தொடரும் இந்த கவிதை   சென்ற வாரம் 06.09.2015 அன்று யாழ்ப்பாணம் தினசரி பத்திரிகையில் பிரபல பத்திரிக்கை  ஒன்றான வலம்புரி நாளிதழில் " ஈழத்து கவிஞர்கள்   ' பக்கத்தில் பிரசுரித்தார்கள் . மிக்க நன்றி .  இந்த தகவலை பகிர்வதில் மகிழ்ச்சி  கே இனியவன்

கவிதை 360 மரணம்

  இன்பமாக வாழ்ந்து ..... இல்லற வாழ்க்கையை ..... இறுதிவரை வாழ்ந்தவனுக்கு ..... இறைவன் கொடுக்கும் .... இன்ப அன்பளிப்பே .... மரணம் .....!!! நோயினால் அவத்திப்பட்டு..... எப்போது தனக்கு மரணம் .... காத்திருக்கும் நோயாளிக்கு ..... இறைவன் கொடுக்கும் ..... அளப்பரிய வெகுமதி .... மரணம் .......!!! தெரியாமல் மனிதனாய் .... பூவுலகில் பிறந்தவனின் .... முட்டாள் தனமான செயல் .... தற்கொலை மரணம் .....! இறைவன் தந்த உடலையும் .... உயிரையும் -அனுமதியின்றி .... பறிக்கும் செயலே தற்கொலை....  மரணம் ...!!! மரணத்தை விரும்புபவன் .... மரணத்தோடு வாழ்பவன் ..... மரணம் இயற்கையின்கொடை..... மரணத்தை உணர்ந்து வாழ்பவன் .... மரணத்தை தவமாய் கருதுபவன் .... பிரபஞ்சத்தில் ஞானி .....!  Reply

கவிதை 360 உணவு

படம்
  உண்னும் உணவு பசியை ..... போக்க மட்டுமல்ல ..... உன் உணர்வையும் ..... வளர்க்க வைக்கவேண்டும் ... உணவு என்பது உழவு மட்டுமல்ல .... உனது மண்ணின் உணர்வும் ....!!! உணவை தயாரிக்கும்போது .... மன அமைதியுடன் சமைக்கவேண்டும் .... உணவை தயாரிப்பவரின் உணர்வு .... உணவில் நிச்சயம் கலக்கும் ..... குடும்ப சச்சரவுக்கு உணவு ஒரு .... பிரதான காரணி - மன அமைதியான ... உணவு தயாரிப்பு அமைதியான .... குடும்ப உறவை வளர்க்கும் ....!!! உலகமயபடுத்தலால் உணவை .... மாற்றிவருகிறோம் -மாற்றாதீர் .... உணவு முறையை மாற்றாதீர் ..... உணர்வுகளும் நிச்சயம்மாறும்....!!! thumb_up Like thumb_down Dislike more_horiz on Fri 13 Nov 2015 - 1:08 by நண்பன் உணவுக்கும் உணர்வுக்கு நீங்கள் போட்ட முடிச்சு சூப்பர் thumb_up Like thumb_down Dislike more_horiz on Mon 16 Nov 2015 - 20:59 by கவிப்புயல் இனியவன் நண்பன் wrote: உணவுக்கும் உணர்வுக்கு நீங்கள் போட்ட முடிச்சு சூப்பர thum Reply  Reply  share  Home  Last  Watche

கவிதை 360 குழந்தை

படம்
  ஆயிரம் துயரங்களுடன் ... வீடு வரும் போது .... அத்தனையும் காற்றோடு  பறந்துவிடும் அன்பு  குழந்தையின் சிரிப்பால் ... அது சிரிப்பல்ல .... இறைவனின் வரம் ....!!! on Thu 9 Oct 2014 - 22:33 by கவிப்புயல் இனியவன் இல்லத்தில் ஆயிரம் ... பூக்கள் மலரலாம் ... உள்ளத்தால் மலரும் .. குழந்தையின் சிரிப்புக்கு ... குளிர்ந்திடும் இல்லத்தில் ... அன்பு என்னும் வாடாத பூ ..