கவிதை 360 இயற்கை கவிதை
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கவிப்புயல் இனியவன் கவிதை 360
கவிப்புயல் இனியவன்
மனிதன் காட்டுக்குள்....
நுழையும் போது...!
குரங்குகள் தாவும் ...!
நரிகள் ஊளையிடும் ...!
குருவிகள் ஓலமிடும் ..!
இத்தனையும் அவை
சந்தோசத்தால் ..
பயத்தால் செய்யவில்லை....
மரங்களுக்கு அவை ....
கொடுக்கும் -சமிஞ்சை...
மனிதர்கள் வருகிறார்கள்...
மரங்களே விழிப்பாக .....
இருங்கள் எச்சரிக்கின்றன ....!!!
&
இயற்கை வள கவிதை
கவிப்புயல் இனியவன்
மனிதா ..?
நீ ஒரு வீடு கட்டுவதற்காக ......
எங்களின்பல நூறு .......
இருப்பிடங்களை அழிக்கிறாய்
நாங்கள் ....
பறந்த்திடுவோம் என்ற ....
நம்பிக்கைதான்...
சண்டையிடுவதற்கு .....
சக்தியில்லாதவர்கள் .....!!!
இனத்தை .....
அழிப்பவனை இனவாதி
என்றால் ......
நீ பிற இனத்தையல்லவா ...
அழிக்கிறாய் ...
உன்னை அப்படி அழைப்பது ..
தெரியவில்லை ...?
&
இயற்கை வள கவிதை
கவிப்புயல் இனியவன்
கருத்துகள்
கருத்துரையிடுக